ஏ.கே.ஆர் அகாடமி (சி.பி.எஸ் இ) பள்ளியில் பொங்கல் விழா!!!

திருப்பூர்,  திருமுருகன்பூண்டி அணைப்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஏ.கே.ஆர் அகாடமி (சி.பி.எஸ் இ) பள்ளியில் பொங்கல் விழா பள்ளி வளாகத்தில் கோலாலகமாக  கொண்டாடப்பட்டது. விழாவுக்கு ஏ.கே.ஆர் அகாடமி பள்ளி தாளாளர் லட்சுமி நாராயணன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் மணிமலர் வரவேற்றார். பொங்கல் விழாவை முன்னிட்டு பள்ளியில் பணியாற்றும் அனைத்து  ஆசிரியைகளும் பொங்கல் வைத்தனர். பின்னர்  செய்த பொங்கலை படையல் செய்து சாமி கும்பிட்டனர்.                    இதைத்தொடர்ந்து பள்ளி மாணவிகளின் லெசிம், ஆசிரியயைகளின் கும்மியாட்டம் உள்பட பல்வேறு நடனங்களை ஆடினர். தொடர்ந்து பெற்றோர்களுக்கும்,  பேருந்து ஓட்டுனர்கள், பள்ளி ஆயாக்கள் ஆகியோருக்கும்  மெதுவாக சைக்கிள் ஓட்டுதல் நொண்டி அடித்து ஓடுதல், லெமன் ஸ்பூன், மைதா மாவில் ஒளித்துவைக்கப்பட்ட காசை ஊதி கண்டுபிடித்தல், உள்பட பல்வேறு வித்தியாசமான போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவுக்கான  ஏற்பாடுகளை ஏ.கே.ஆர் பள்ளி நிர்வாக அதிகாரி சுப்பிரமணியம் செய்து இருந்தார்.