உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் 38,060 பயனாளிகளுக்கு ரூ.5.20 கோடியில் நலத்திட்ட உதவிகள்!

தமிழ்நாடு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் 38,060 பயனாளிகளுக்கு ரூ.5.20 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.


பயனடைந்த பயனாளிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி! மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உழவர் பாதுகாப்புத் திட்டம் என்ற புதிய திட்டம் மாண்புமிகு அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியில் 10.09.2011 முதல் அறிமுகபடுத்தப்பட்டு தற்போது வரை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 18 வயது முதல் 65 வயதிற்குட்பட்ட 2.50 ஏக்கருக்குள் நன்செய் நிலத்தையோ, 5.00 ஏக்கருக்குள் புன்செய் நிலத்தையோ சொந்தமாக கொண்டு விவசாயம் செய்யும் விவசாயி மற்றும் விவசாயம் சார்ந்த இதர கூலித்தொழில் செய்பவர்கள் மூல உறுப்பினராகவும், குடும்பத்தலைவரை சார்ந்து வாழும் இதர குடும்ப உறுப்பினர்கள் சார்பு உறுப்பினராகவும் பதிவு செய்து கொள்ளலாம். ஒரு குடும்பத்தில் விவசாயத் தொழிலில் ஈடுபடும் கணவன் மற்றும் மனைவி இருவருக்கும் பண்பேறிய சிவப்பு வண்ண த்திலும் (Maroon Card) மூல உறுப்பினராக சார்ந்த வாழும் குடும்பத்தின் பிற உறுப்பினர்களுக்கு சாம்பல் நிறத்திலும் (Grey Card) அடையாள அட்டைகள் வழங்கப்படும். மூல உறுப்பினராக பதிவு செய்ய 2.50 ஏக்கருக்கு மேற்படாத நஞ்செய் நிலம் அல்லது 5.00 ஏக்கருக்கு மேற்படாத புன்செய் நிலம் சொந்தமாக வைத்திருக்க வேண்டும். அந்த நிலத்தில் நேரடியாக பயிர் செய்யும் 18 வயது முதல் 65 வரை உள்ள அனைத்து குறு/சிறு விவசாயிகள் (நேரடி விவசாயம் செய்பவர்) விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலில் ஊதியத்திற்காகவோ அல்லது குத்தகை அடிப்படையிலோ ஈடுபட்டுள்ள 18 வயது முதல் 65 வயது வரை அனைத்து குத்தகைதாரர்கள் மற்றும் தொழிலாளர்கள் மேற்காணும் வரையறைகளில் உள்ளவர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்து வாழும் குடும்ப உறுப்பினர்களும் இத்திட்டத்தின் கீழ் உறுப்பினராக பதிவு செய்யத் தகுதியானவர்கள்.


சார்ந்து வாழ்பவர் என்பது பதிவு பெற்ற மூல உறுப்பினரின் பொருள் ஈட்டாத மனைவி அல்லது கணவன் (நேர்விற்கேற்ப) குழந்தைகள், இறந்துவிட்ட மகனுடைய மனைவி (விதவை மருமகள்) குழந்தைகள் மற்றும் பெற்றோர் சார்பு உறுப்பினர் ஆவார்கள். இத்திட்டத்தின் கீழ் பதிவு பெற்ற உறுப்பினர் ஒருவரின் குழந்தைகளின் தொழிற்பயிற்சி (ITI) மற்றும் பல்தொழில் நுட்ப பயிற்சி (Polytechnic) இ கவின் கலை, ஆசிரியர் பயிற்சி மற்றும் செவிலியர் பட்டயப்படிப்பு (Diploma in Fine Arts, Teacher Education and Nursing), இளங்கலை பட்டப்படிப்பு (Bachelor Degree) கவின்கலை இளங்கலை பட்டம், ஆசிரியர் பயிற்சி மற்றும் செவிலியர் பட்டப்படிப்பு (Bachelor Degree in Fine Arts, Teacher Education and Nursing) , முதுகலை பட்டப்படிப்பு கவின்கலை மற்றும் செவிலியர் முதுகலை பட்டப்படிப்பு (Post Graduate Degree in Fine Arts and Nursing), சட்டம், பொறியியல், மருத்துவம், கால்நடை அறிவியல், வேளாண்மை அல்லது அது தொடர்பான பாடங்களில் இளநிலை தொழிற்கல்வி (Professional Course), முதுகலை தொழிற்கல்வி (Post Graduate Courses) ஆகிய கல்விக்காக அதற்குரிய அனுமதிக்கப்பட்ட உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் உறுப்பினராக பதிவு செய்யப்பட்டவர்கள் இறந்தாலும் அவர்களின் சார்பு உறுப்பினர்களுக்கு தொடர்ந்து கல்வி மற்றும் திருமண உதவித்தொகைகள் வழங்கப்படுகிறது. மேலும், சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திருமண உதவித் திட்டத்திற்கு தகுதியான பதிவு பெற்ற உறுப்பினர்கள் அல்லது அவர்களைச் சார்ந்தவர்கள் அத்திட்டத்தின் கீழ் மட்டுமே உதவித்தொகை பெறுவர். முதுமை காரணமாக உடல் உழைப்பு திறன் இல்லாமல் மகன்/மகள் இருந்தாலும் அவர்களால் ஆதரவு இல்லாமல் புறக்கணிக்கப்பட்ட, ஆதரவற்ற உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் மாதாந்திர ஓய்வூதியம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும் விபத்து நிவாரண உதவி ,இயற்கை மரண உதவித்தொகையும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டடு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை மாண்புமிகு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புதிட்டத்தின் கீழ் 6,731 பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.1,60,79,200/-யும், திருமண உதவித்தொகையாக435 பயனாளிகளுக்கு ரூ.38,02,000/-யும், இயற்கைமரணம்உதவித்தொகையாக 1,125 பயனாளிகளுக்கு ரூ.2,10,12,500/யும், விபத்துநிவாரண உதவித்தொகையாக 75 பயனாளிகளுக்கு ரூ.75,22,500/-யும் மற்றும் முதியோர் ஓய்வூதியமாக 29,623 பயனாளிகளுக்கு ரூ.3,05,11,690/இத்திட்டத்தின் உறுப்பினராக உள்ள குடும்பநபர்களுக்குதிருமண உதவித்தொகையாக 71 பயனாளிகளுக்கு ரூ.5,92,000/-யும் மதிப்பில், என மொத்தம் கடந்த 3 ஆண்டுகளில் 38,060 பயனாளிகளுக்கு ரூ.5,20,59,390/- மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த திருப்பூர் வாலிபாளையத்தைச் சேர்ந்த திருமதி. தாட்சாயினி கூறியதாவது: எனது பெயர் தாட்சாயினி வயது 70. எனது கணவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். எனக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டதால் அவர்களால் என்னை பராமரிக்க இயலவில்லை. நான் கூலி வேலை செய்து வருகிறேன். வயது முதுமை காரணமாக என்னால் அதிக நேரம் உழைக்க முடியவில்லைஆதவற்ற முதியவர்களுக்கு வழங்கப்படும் முதியோர் உதவித்தொகை பெற வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தேன். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அய்யா அவர்களின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம், என்னை போன்ற ஆதரவற்றவர்களுக்கு முதியோர் உதவித்தொகையாக மாதம் ரூ.1,000/- வழங்கி வரும் மாண்புமிகு அம்மா அவர்களுக்கும்மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அய்யா அவர்களுக்கும் வாழ்நாள் முழுவதும் நன்றிக் கடன் பட்டுள்ளேன் என்று தெரிவித்தார். இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த திருப்பூர் சென்னிமலைபாளையத்தைச் சேர்ந்த திரு.கருப்புசாமி தெரிவித்ததாவது: எனது பெயர் கருப்புசாமி (வயது 75). நான் நல்லூர் சென்னிமலைபாளையத்தில் வசித்து வருகிறேன். எனக்கு ஒரு மகள் உள்ளார். அவருக்கு திருமணமாகிவிட்டதால், நான் ஆதரவின்றி தனியாக வசித்து வருகிறேன். வயதின் முதுமையின் காரணமாக எனக்கு உழைக்கும் திறன் இல்லை. எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித் தொகை மாதம் ரூ.1,000/- வழங்கப்படுகிறது. எனக்கு இந்த ஓய்வூதியம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எனது வறுமை நிலையை போக்கிய மாண்புமிகு அம்மா அவர்களுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அய்யா அவர்களுக்கும் எனது குடும்பத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என கூறினார்.