குடிநீரில் கழிவுநீர் கலந்து 50 க்கும் மேற்பட்டோர் கிராம பொதுமக்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை
விருத்தாசலம் சத்தியவாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஆலந்துறைபட்டு கிராமத்தில் குடிநீரில் கழிவுநீர் கலந்து 50 க்கும் மேற்பட்டோர் கிராம பொதுமக்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

 


 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம்   சத்தியவாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஆலந்துறைபட்டு கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்கு வசித்து வரும் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் குடிதண்ணீர் செல்லும் குழாய் உடைந்து அதன் வழியாக தொடர்ந்து 2 நாட்களாக கழிவு நீர் கலந்துள்ளது. இது தெரியாமல் பொதுமக்கள் அந்த தண்ணீரை பருகியதால் 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள்  வாந்திபேதி ஏற்பட்டுள்ளது. பின்னர் பாதிக்கப்பட்டவர்களை கரும்பவேப்பிலங்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் மற்றும்  விருத்தாசலம் அரசு மருத்துவமனையிலும் சுமார் 50 க்கும் மேற்பட்டோர்  தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இச்சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.