ஈரோடு மாவட்டம் பவானியில் பொங்கல் பரிசு கொடுக்கும் விழா

ஈரோடு மாவட்டம் பவானியில் பொங்கல் பரிசு கொடுக்கும் விழா நடைபெற்றது.இதில் பவானி வட்டத்திற்கு உட்பட்ட 120 கடைகளில் 74 ஆயிரத்து 630 கார்டுகளுக்கு சர்க்கரை ஒரு கிலோ அரிசி ஒரு கிலோ முந்திரி திராட்சை ஏலக்காய் கரும்பு ஆகிய பொருட்கள் கொடுக்கப்பட்டது.  கிருஷ்ணராஜ் ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பொருட்களை வழங்கினார். இதில் வட்ட வழங்கல் அதிகாரி மற்றும் அதிமுகவை சேர்ந்த ராஜேந்திரன் முத்துசாமி சீனிவாசன் மகளிர் அணியைச் சேர்ந்த அனுசுயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.