கும்பக்கரை அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!!!தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் தேனி மாவட்டம் மட்டும் இன்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதுண்டு.

இந்நிலையில் தொடர் பொங்கல் விடுமுறையால் அதிகளவில் சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

மேலும் இன்று காணும் பொங்கல் என்பதால் கும்பக்கரை அருவிக்கு காலை 8 மணி முதல் அதிக அளவில்  சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

மேலும் குடும்பத்துடன் வரும் சுற்றுலா பயணிகள் குளித்து விட்டு தாங்கள் கொண்டு வந்துள்ள உணவு வகைகளை உண்டு மகிழ்ந்து காணும் பொங்கலை இயற்கை சூழலில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் மகிழ்சியுடன் கொண்டாடினர்.