குடியுரிமை சட்ட விவகாரம்; திருப்பூர் ரயில் நிலையத்தில் தமுமுக போராட்டம்

திருப்பூரில் போலீசார் தடையை மீறி ரயில் தண்டவாளத்தில் இறங்கி ரயில் மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட தமுமுகவினர்  கைது !! போரிட்டத்தில் ஈடுபட்ட இளைஞரை போலிசார் தாக்கியதாக வாக்குவாதம்.


குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கண்டித்தும்  ரத்து செய்யக்கோரியும் நாடு முழுவதிலும் பல்வேறு அமைப்பினர் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக திருப்பூர் ரயில் நிலையம் முன்பு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் சார்பில் தடையை மீறி ரயில் மறியல் போராட்டமானது அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து ரயில் நிலையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. மாலை  திருப்பூர்  ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டமான நடைபெற்றது ஆர்ப்பாட்டம் துவங்கிய சில நிமிடங்களில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் போலீசார் தடையை மீறி ரயில் நிலையத்திற்குள் நுழைந்து சுவர் ஏறி  தண்டவாளத்தில் இறங்கி மறியலில் ஈடுபட்டனர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த முயன்ற போது  போலீசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குமிடையே  தள்ளுமுள்ளு ஏற்பட்டது இறுதியில் மறியலில் ஈடுபட்ட 500 க்கும் மேற்பட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர். இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த முயன்றபோது செரங்காடு பகுதியை சேர்ந்த சேக்பரீது என்ற இளைஞரை  போலீசார் தாக்கியதாகவும் இதனால் அவர் கைகளில் காயமடைந்துள்ளதாகவும் கூறி தமுமுகவினர் ரயில் நிலையம் முன்பு அமர்ந்து மீண்டும் தர்ணாவில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது இந்த ரயில் மறியல் காரணமாக அரை மணி நேரத்திற்கும் மேலாக ரயில் போக்குவரத்து திருப்பூர் மார்க்கத்தில்  தடைபட்டது.