பொதுமக்கள் அரசு அதிகாரிகள்பாராட்டும் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம்

ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் கருணை இல்லம்.கோபி.

 


 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகில் நஞ்ச கவுண்டம்பாளையம் என்ற இடத்தில் கடந்த 13 வருடங்களாக கருணை இல்லம் என்ற பெயரில் குழந்தைகள் காப்பகத்தை பொதுமக்களின் உதவியுடன் கிறிஸ்து தாஸ் மற்றும் சந்தோஷ் காந்தி இருவரும் இணைந்து நடத்தி வருகிறார்கள்.ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்கள் படிக்கின்றனர்,அருகில் உள்ள அரசு பள்ளியில் பாதுகாப்பாக ஆட்டோவில் சென்று படிக்கிறார்கள் 30 குழந்தைகளை பராமரித்து வரும் இவர்கள் தங்கள் சொந்த இடத்தில் 11 அரசு துறைகளில் அனுமதி பெற்று நடத்துகின்றனர். இவர்களுக்கு பொதுமக்கள் செய்யும் உதவியை கொண்டு சிறப்பாக நடத்து கின்றனர், இதை பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பாராட்டுகின்றனர்.