பழனி ஒன்றிய யூனியன் அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்பு

பழனி ஒன்றிய யூனியன் அலுவலகத்தில் உள்ள ஒன்றிய குழு கூட்ட அரங்கத்தில்  உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.இவ்விழாவில் மாவட்ட தேர்தல் அதிகாரிகளான  சார் ஆட்சியர் உமா, பிடிஓ, ஏழுமலை, மற்றும் பிடிஓ நாகராஜன், உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். உறுதிமொழி எடுத்தனர் நிகழ்வில் அதிமுக ,திமுக இதர கட்சிகள் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்..