நான் சிறு பிள்ளையாக இருந்தபோது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டேன் - ராகுல் ராமகிருஷ்ணன்


விஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜூன்ரெட்டி  படத்தில் அவரின் நெருங்கிய நண்பர் சிவாவாக நடித்தவர் ராகுல் ராமகிருஷ்ணன். சைன்மா என்கிற குறும்படத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் அனைவருன் கவனத்தையும் ஈர்த்தார். 29 வயதாகும் அவர் ட்விட்டரில் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவர் கூறியிருப்பதாவது,
நான் சிறு பிள்ளையாக இருந்தபோது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டேன். என் துக்கம் பற்றி இதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை. அனைத்தும் காயப்படுத்துகிறது. நீதியே இல்லை. தற்காலிக ஆறுதல் தான். நல்லபடியாக நடந்து கொள்ளுமாறு ஆண்களுக்கு கற்றுக் கொடுங்கள். தைரியமாக இருங்கள். நல்லபடியாக இருங்கள் என்று தெரிவித்துள்ளார்.தன்னை யார் பலாத்காரம் செய்தது என்ற விபரத்தை ராகுல் தெரிவிக்கவில்லை. அவரின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் காமெடி செய்து எங்களை சிரிக்கை வைக்கும் உங்களுக்குள் இப்படி ஒரு சோகமா என்று தெரிவித்துள்ளனர். தனக்கு ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள ராகுல், குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். நடிக்க வரும் முன்பு ராகுல் ராமகிருஷ்ணா பத்திரிகையாளராக இருந்தார். பாடல்கள் எழுதியுள்ளார். திரைக்கதை எழுதியிருக்கிறார். தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார்.