உருண்டை உருண்டையாய் கடைவிரித்து விற்பனை: மாட்டு சாணிக்கு 'மரண மாஸ் ரேட்" !!

மாட்டு சாணிக்கு வந்த மவுசு!! 



பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதை ஒட்டி தமிழகமே விழாக்கோலம் பூண்டு வருகிறது. தொழில் நகரான திருப்பூரில் ரோட்டோரங்களில் கரும்பு, வாழை, மஞ்சள் உள்ளிட்ட பொருட்களும், வேப்பிலை பூளைப்பூ, ஆவாரம்பூ உள்ளிட்ட பொருட்களும் விற்பனைக்கு வந்து உள்ளன. இதில் ஆண்டு தோறும் ஏராளமான கடைகள் முளைத்து கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் விற்பனை அனல் பறக்கும்.


 இந்த ஆண்டு கொஞ்சம் கூடுதலாக மாட்டு சாணியும் விற்பனைக்கு வந்து, ரோட்டோர வியாபாரிகளின் கடைகளில் காட்சி பொருளாக வைக்கப்பட்டு உள்ளது. உருண்டை உருண்டையாய் உருட்டி ரோடுகளில் விற்பனைக்காக வைத்து உள்ளனர். 


குறிப்பாக திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டு மார்க்கெட், ராயபுரம், மங்களம் ரோடு, காலேஜ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மாட்டுச்சாணி கடைகள் முளைத்து உள்ளன. 


திருப்பூரில் ஒரு உருண்டை மாட்டு சாணிக்கு ரூ.10 முதல், 20 ரூபாய் வரை விலை வைத்து விற்கப்படுகிறது. இதையும் பொதுமக்கள் ஏராளமான வந்து வாங்கி செல்கிறார்கள். சாதாரண நாட்களில் ஒரு பக்கெட் 20 ரூபாய்க்கு மாட்டு சாணி விற்கப்படும்.


பண்டிகை நாள் என்பதால் உருண்டை 20 ரூபாய் வரை விற்கப்படுகிறது.  அதுவும் ரோட்டோர வியாபாரிகள் கடைகளில் காட்சிப்பொருளாக வைத்து மாட்டு சாணி விற்கின்றனர். 


 


 


Previous Post Next Post