எஸ்.ஐ., வில்சன் குடும்பத்துக்கு ரூ.1 கோடி: முதல்வர் வழங்கினார்.

களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி வழங்கினார் முதலமைச்சர்


கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சுட்டுக்கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்துக்கு, அரசு அறிவித்த நிவாரணத் தொகை1 கோடி  ரூபாயை முதலமைச்சர் வழங்கினார்.


தமிழக-கேரள எல்லையில் உள்ள சோதனைச்சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 10 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.


சுட்டுக்கொல்லப்பட்ட வில்சன் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.


இந்நிலையில் தலைமை செயலகத்திற்கு வில்சனின் குடும்பத்தினரை வரவழைத்து, அரசு அறிவித்த ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை அவரது மனைவி ஏஞ்சல் மேரியிடம் முதலமைச்சர் வழங்கினார்.