கோலாகல பொங்கல் கொண்டாட்டம் அசத்திய பார்க்ஸ் கல்லூரி மாணவ-மாணவியர்பொங்கல் விழாவை கோலாகலமாக கொண்டாடிய பார்க்ஸ் கல்லூரி மாணவர்கள்

 

 

 

திருப்பூரை அடுத்துள்ள சின்னக்கரையில் உள்ள பார்க்ஸ் கல்லுரியில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

 
 

பொங்கல் நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலாளர் டி.ஆர்.கார்த்திக் தலைமை தாங்கினார். நிர்வாக அதிகாரி முனைவர் எம்.ராஜாமணி சிறப்புரையாற்றினார்.

 


 

இவ்விழாவில் சிலம்பாட்டம், இளவட்டக்கல் தூக்குதல், வடை கடித்தால், கயிறு இழுத்தல் ரங்கோலி. பொங்கல் வைத்தால், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல் மெதுவாக இருசக்கர வாகனம் ஓட்டுதல், பாட்டு போட்டி, நடன போட்டி, கட்டுரை போட்டி போன்ற பல போட்டிகள் நடத்தப்பட்டது.

 


 

இதில் வெற்றி  பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்லுரியின் செயலாளர் பரிசுகளை வழங்கினார்.  ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் கலாச்சாரத்தை கொண்டாடும் விதமாக வெட்டி சேலையில் வந்திருந்தனர்.

 


 

மாணவ மாணவிகள் பொங்கல் வைத்து நடனம் ஆடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சி ஏற்படுகளை முனைவர் ஜி.ஜோதி செய்திருந்தார். நாட்டுப்பனுடன் விழா நிறைவு பெற்றது.