தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் பொங்கல்விழா! கோலாகலம்! 

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் பொங்கல்விழா! கோலாகலம்!


தமிழர்களின் பாரம்பர்ய பண்டிகையான தைப் பொங்கல் பண்டிகை வரும் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. 


பள்ளி, கல்லூரி, அரசு, தனியார் அமைப்புகள், சங்கங்களில் சமத்துவப் பொங்கலாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 


அதேபோல, தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்திலும்  சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.


 இவ்விழாவில், மாநகராட்சி ஆணையாளர் முனைவர்.வீ.ப. ஜெயசீலன், தனது மனைவி குழந்தையுடன் கலந்து கொண்டு,  பொங்கலிடும் நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். 


மாநகராட்சி தலைமை அலுவலகம், மண்டல அலுவலகங்களில் பணிபுரியும்,  நூற்றுக்கும் மேற்பட்ட ஆண், பெண் ஊழியர்களும் கலந்து கொண்டனர். 


 மாநகராட்சி ஊழியர்கள் பங்குபெற்ற கிராமிய நடனம்,  முறுக்கு கடித்தல், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல்,  பானை உடைத்தல், கோலப்போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 


 இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆணையர் ஜெயசீலன் பரிசுகள் வழங்கினார்.