சி.சீனிவாசன் அம்மா இளைஞர் விளையாட்டுத்திட்டத்தினை துவக்கி வைத்தார்

 வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன்  பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் அம்மா இளைஞர் விளையாட்டுத்திட்டத்தினை துவக்கி வைத்தார்



புரட்சித் தலைவி அம்மா, தமிழக இளைஞர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, தங்களது திறமைகளை நிருபித்திடவும், விளையாட்டுகளில் வெற்றி பெற தேவையான பயிற்சிகளையும், வாய்ப்புகளையும் வழங்கி இளைஞர் மற்றும் விளையாட்டு நலத்துறையின் மூலம் இந்தியாவிற்கே நல்வழிகாட்டியாக திகழ்ந்தார்கள்.  இளைஞர்கள் தினமும் குறிப்பிட்ட நேரம் விளையாடுவதன் மூலம் உடல் உறுதிபடுவதுடன் மனதிற்கு புத்துணர்ச்சி ஏற்படுகிறது. இதனால் இளைஞர்கள் சுறுசுறுப்பாகவும், உற்சாகத்துடனும், தன்னம்பிக்கையுடனும் பணி செய்திட வாய்ப்பு ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு திறமை வாய்ந்த இளைஞர்களை மேம்படுத்திடவும், புதிய விளையாட்டு வீரர்களை உருவாக்கிடவும் தமிழக அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.



நகர்புறங்களில் இருந்தால் மட்டுமே பல்வேறு விiளாயட்டுகளில் பங்கேற்கும் வாய்ப்புகிட்டும் என்ற நிலையினை மாற்றி கிராமப்புற இளைஞர்களும் பல்வேறு நிலையிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை ஏற்படுத்துவதற்காகவும் கிராமபுற இளைஞர்களின் விளையாட்டு திறனை உலகம் அறிந்து கொள்ளும் வகையில், செய்வதற்காகவும் தமிழக அரசால் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா  தமிழக கிராமங்களில் உள்ள இளைஞர்கள் தங்களது தனித்திறமைகளை நிருப்பித்திடவும் இளைஞர்கள் விளையாட்டின் சிறப்புக்களை பற்றிய அறிந்து கொள்வதற்காகவும் விளையாட்டு விதிகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும்,  இளைஞர்களுக்கு ஊக்கமும் பயிற்சியும், அளிப்பதற்காக கிராம ஊராட்சி விளையாட்டு போட்டிகள் என்ற திட்டத்தினை 2013-2014-ஆம் ஆண்டில் ஏற்படுத்தி, விளையாட்டு போட்டிகள் நடத்திட தமிழக அளவில் ரூ.6.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஒரு கிராமத்திற்கு  ரூ.20 ஆயிரம் அளவில் வழங்கி, விளையாட்டு போட்டிகள் நடத்தி இளைஞர்கள் தங்களது தனித்திறமையை வெளிபடுத்துவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தி தந்தார்கள்.


 தற்போது, மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்; திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் கிராமங்களில் உள்ள இளைஞர்களின் ஆரோக்கியத்தினையும், மனவளத்தினையும் மேம்படுத்திடவும், கூட்டு மனப்பான்மையினை உருவாக்கிடவும் இளைஞர்கள் பயிற்சி பெற தேவையான களம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதற்காகவும் அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம் என்ற திட்;டத்தினை உருவாக்கி தமிழக அளவில் 12,524 கிராம ஊராட்சி  மற்றும் 528 பேரூராட்சிகளில் இத்திட்டத்தினை செயல்படுத்திட ரூ.76.23 கோடி ஒதுக்கீடு செய்து, 13.01.2020 நேற்று துவக்கி வைத்துள்ளார்கள். 



திண்டுக்கல் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 306 கிராம ஊராட்சிகளிலும், 23 பேரூராட்சிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளன. ஒவ்வொரு ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள விளையாட்டிற்கு தேவையான உபகரணங்கள் இத்திட்டத்தின் வாயிலாக வழங்கப்படவுள்ளன. கபாடி, வாலிபால், கிhpகெட் மற்றும்  பூ பந்து போன்ற விளையாட்டுகளில் ஏதேனும் மூன்றை இளைஞர்கள் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் அப்பகுதியில் விளையாட்டிற்கு தேவையான மைதானம் கண்டறியப்பட்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் அல்லது பொது நிதியின் மூலம் மைதானங்கள் அமைத்து தரப்படும்.


இதில் விளையாட்டிற்கு தேவையான கம்பங்கள், கிhpகெட் மட்டைகள், பந்துகள், கையுறைகள் ஆண், பெண் என இருபாலருக்கும் தனித்தனியாக வழங்கப்படும். மேலும், திறந்தவெளி உடற்பயிற்சி மைங்களுக்கு தேவையான உபகரணங்களும் வழங்கப்படுகிறது. விளையாட்டுக்கு தேவையான ஆடுகளங்கள் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ஏற்படுத்தி தரப்படும். அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தின்படி, கிராம ஊராட்சிகளில் உள்ள 15 முதல் 30 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனி உறுப்பினராக சேர்க்கப்பட்டு, “அம்மா இளைஞர் விளையாட்டுக் குழு” ஏற்படுத்தப்படும். இக்குழுவை சார்ந்தவர்களுக்கு உடற்கல்வி ஆசிhpயர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படவுள்ளன. அதன்படி, இன்று திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தினை சார்ந்த செட்டிநாயக்கன்பட்டி, பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. 


பயிற்சிக்கு பின்னர் ஊராட்சி ஒன்றிய அளவில், உள்ள கிராம அளிவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். இதில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு வெற்றிக் கோப்பை மற்றும் சீருடை வழங்கப்படும். முதலிடத்தை பெற்றவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு அழைத்து செல்லப்படுவார்கள். இதனை போன்று மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு அரசின் செலவில் அழைத்து செல்லப்படவுள்ளனர். இதன் மூலம் கிராமப்புற இளைஞர்கள் தங்களது திறமையால் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை தமிழக அரசு ஏற்படுத்தி தந்துள்ளது. இப்போட்டிகளில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் மாநில அளவில் வெற்றி பெற்று தங்களுக்கும் நமது மாவட்டத்திற்கும் பெருமையினை தேடி தர வேண்டும். இவ்வாறு மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன்  தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பா.வேலு, மாவட்ட ஊரக வளா;ச்சி முகமை திட்ட இயக்குநர் . கே.கவிதா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.மருதராஜ்,அறங்காவலர்கள் தேர்வு குழு தலைவர் பிரேம்குமார், திண்டுக்கல் கூட்டுறவு அச்சக சங்கத்தலைவர் அ.ஜெயசீலன், அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதிமுருகன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆர்.முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர்கள்  ரோஸ்பாத்திமா,  லதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் .கிருஷ்ணன், மலரவன், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள்  நாகராணி, திரு.மோகன், ஊராட்சி மன்ற தலைவர்கள்  ரேவதி, லதாதருமராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






Previous Post Next Post