பழனியாண்டவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் திருப்பாவை மற்றும் திருவெம்பாவைக்கான போட்டிகள்

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கக்கூடிய பழனியாண்டவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் திருப்பாவை மற்றும் திருவெம்பாவைக்கான போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி பழனியாண்டவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தில் நடைபெற்றது.

 

இந்நிகழ்வில் இறைவணக்கத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. இந்நிகழ்வின் தலைமையாக அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் செயல் அலுவலர் ஜெயச்சந்திர பானு ரெட்டி தலைமை ஏற்றார். முன்னிலையாக திருக்கோயில் உதவி ஆணையர் செந்தில்குமார் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளார். வரவேற்புரையாக பழனியாண்டவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தமிழாசிரியர் முருகானந்தம் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு திருக்கோயில் செயல் அலுவலர் ஜெயச்சந்திர பானு ரெட்டி மற்றும் திருக்கோயில் உதவி ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் பரிசுகளையும்

வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களையும் வழங்கினர்.

 


 

வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு பொருள் உபயதாரராக ஹோட்டல் கண்பத் உரிமையாளர் ஹரிஹரமுத்து பரிசுகளை வழங்கினார். மேலும் தமிழ் புலவர் செல்வி மஹேந்திரன் பள்ளியின் முதல்வர் அன்னபூரணி அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்கள் கூறுகையில் பள்ளி மாணவர்கள் இன்றைய சூழலில் தமிழை தமிழ்மொழியைப் படிப்பதற்கு தயங்குகின்றனர். அனைத்து தனியார் மெட்ரிக் பள்ளிகளில் தமிழை ஒரு பாடமாக மட்டுமே வைத்துள்ளனர். முதன்மை மொழியாக வைத்து பயிற்று விற்பதற்கு பள்ளி நிர்வாகம் முன்வருவதில்லை எனவே

திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பாக நடைபெற்று வரும் இந்தப் பள்ளியில் ஆண்டு தோறும் தமிழை போற்றும் விதமாக திருப்பாவை மற்றும் திருவெம்பாவைக்கான பயிற்சிகள் கொடுக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகின்றனர்.

 


 

அதனடிப்படையில் மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை தூண்டும் விதமாக இந்த நிகழ்ச்சி அமைய வேண்டும் என்ற நோக்கில் ஆண்டுதோறும் இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. எனவே மாணவ மாணவிகள் தமிழ் மொழியை முதன்மை மொழியாகவும் தமிழ் கடவுளான தண்டாயுதபாணி சுவாமியை முதன்மை கடவுளாக பாவித்து வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறினார். பழனியாண்டவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் அன்னபூரணி அனைவருக்கும் நன்றி கூறி விழாவினை நிறைவு செய்தனர். இறுதியாக நாட்டுப்பண் இசைத்து விழா இனிதே முடிவடைந்தது.




 

 

Previous Post Next Post