பிரேக் அப் செய்த 'காதலியின்' சகோதரிக்கு ஆபாச படங்கள் அனுப்பிய வாலிபர் கைது!

கோவை சிங்காநல்லூர் விவேகானந்தா வீதியைச் சேர்ந்த ராஜாவின் மகன் ரூபன். பட்டதாரியான ராஜா கான்ஸ்டரக்சன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.


இந்த நிலையில் கோவை,சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த  இளம் பெண்ணுக்கும் ரூபனும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ரூபனின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதாகவும், ரூபனுடைய நடவடிக்கைகள் ஒழுக்கத்துக்கு மாறாக இருந்ததால் அந்த பெண் ரூபனுடன் பிரேக் அப் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.


இதனால் ஆத்திரமடைந்த ரூபன், இருவரும் காதலித்து வந்தபோது இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையதளத்திலும்,பேஸ்புக்கிலும் பகிர்வதாக மிரட்டியுள்ளார், மேலும் காதலித்த பெண்ணின் சகோதரியின் கைப்பேசிக்கு ஆபாச படங்களை அனுப்பியுள்ளார்.


இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் சிங்காநல்லூர்  போலீசார் ரூபனை கைது செய்தனர். 


Previous Post Next Post