நாங்க போலீஸ் இல்ல.. பொது நல விரும்பிகள்... பாசக்காரர்களாகிய பழனி போலீஸ்!!!

பழனியில் மனநலம் பாதித்தவர்களுடன் பொங்கல் கொண்டாடிய  காவல்துறையினர். 


பழனி புது-தாராபுரம் சாலையில் மால்குடி மருத்துவமனை அருகில் உள்ள கோகுலம் மனநலம் பாதித்தோர் இல்லத்தில் பழனி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தன் அவர்கள் தலைமையில் காவல்துறையினர் பொங்கல் விழாவை கொண்டாடினர்.


நிகழ்ச்சியில் பழனி நகர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் பழனி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சையத் பாபு, சத்திரப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் வீரகாந்தி மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


விழாவில் காவல்துறையினர் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுடன் பொங்கல் வைத்து  விழாவை சிறப்பித்தனர். மேலும் அவர்களுக்கு சிறிய விளையாட்டுப் போட்டிகள் வைத்து அவர்களை மகிழ்வித்தனர்.


மேலும் காவல் துறையினர் இணைந்து காப்பகத்திற்கு 150 கிலோ அரிசி மற்றும் 15 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்கள் வழங்கினர். காவல்துறை கருணை துறையாக மாறிய இச்செயலை சமூக ஆர்வலர்களும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றன