குடியரசு தினத்தையொட்டி வேலூரில் நேதாஜி விளையாட்டரங்கில் கலெக்டர் அ.சண்முகசுந்தரம், தேசிய கொடியை ஏற்றி மரியாதை !

குடியரசு தினத்தையொட்டி வேலூரில் நேதாஜி விளையாட்டரங்கில் கலெக்டர் அ.சண்முகசுந்தரம், தேசிய கொடியை ஏற்றி வைத்தார்!


இந்திய நாட்டின் 71 வது குடியரசு தினத்தை முன்னிட்டு வேலூர்  கோட்டையில் அமைந்துள்ள காந்தியடிகளின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து பின்னர்  கோட்டை கொத்தளத்தில் கலெக்டர் அ.சண்முகசுந்தரம், தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர்  நேதாஜி விளையாட்டரங்கில் குடியரசு தினத்தையொட்டி கலெக்டர் தேசிய கொடியை ஏற்றி வைத்து பின்னர்  வெண் புறாக்களை பறக்க விட்டார்கள். அதனைத்தொடர்ந்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார்.


சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர்   காவலர்  நற்பணி பதக்கம் 13 காவலர்களுக்கு பதக்கத்தையும், சிறப்பாக பணியாற்றிய 48 காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் மேலும் பல்வேறு அரசுத்துறைகளை சார்ந்த 195 அலுவலர்களுக்கு சிறப்பாக பணியாற்றிதற்காக பாராட்டுச் சான்றிகளையும் கலெக்டர்  வழங்கினார். பின்னர்  அரசு நலத்திட்ட உதவிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்  நலத்துறை சார்பில் 05 நபர்களுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பிலான சலவை பெட்டியையும், பிற்படுத்தப்பட்டோர்  மற்றும் சிறுபான்மையினர்  நலத்துறையின் சார் பில் 05 நபர் களுக்கு ரூ.18 ஆயிரத்து 623 மதிப்பிலான இலவச தையல் இயந்திரமும், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறையின் மூலம் 10 விவசாயிகளுக்கு ரூ.17 இலட்சத்து 94 ஆயிரம் 960 மதிப்பிலான விவசாய உபகரணங்கள்,


வேளாண் இயந்திரமும் மற்றும் இடுபொருட்களையும், முன்னாள் படைவீரர்  நலத்துறையின் சார்பில் 03 பயனாளிகளுக்கு வருடாந்திர பராமரிப்பு தொகை ரூ.75 ஆயிரத்திற்கான காசோலையினையும், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மூலம் 2 நபர்களுக்கு ரூ.1 இலட்சத்து 17 ஆயிரத்து 380 மதிப்பிலான இணைச்சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரும், மாவட்ட தொழில் மையத்தின் மூலம் முதல் தலைமுறை தொழில்முனைவோர்  மற்றும் பிரதமமந்திரி  வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 45  இலட்சத்து 21 ஆயிரம் 972 மதிப்பிலான மான்யத்துடன் கூடிய கடனுதவி தொகையும், தாட்கோ வங்கியின் மூலம் 04 நபருக்கு தொழில் முனைவோர்  திட்டத்தின் மூலம் ரூ.16 இலட்சத்து 21 ஆயிரத்து 612/- மதிப்பிலான நான்கு சக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்களையும், மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட முதிர்வுத் தொகை ரூ.2 இலட்சத்திற்கான ஆணையினையும், 

வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் 213 பயனாளிகளுக்கு ரூ.77 இலட்சத்து 66 ஆயிரம் மதிப்பிலான நேரடி கடன்களையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் 17 பயனாளிகளுக்கு ரூ.26 இலட்சத்து 88 ஆயிரம் மதிப்பிலான அம்மா இருசக்கர வாகன திட்டத்திற்கான வங்கி கடனும், பள்ளி கல்வித்துறையின் சார்பில் 02 நபர்களுக்கு ரூ.1 இலட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான சிறந்த பள்ளிகளுக்கு காசோலையினையும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 42 பயனாளிகளுக்கு ரூ.84 ஆயிரத்து 252 மதிப்பிலான மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்து நிதியையும் ஆகமொத்தம் 317 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 90 இலட்சத்து 32  ஆயிரத்து 799/- மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அ.சண்முகசுந்தரம்,  வழங்கினார்.


தொடர்ந்து வேலூர்  ஈ.வே.ரா.நாகம்மை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சத்துவாச்சாரி  ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காட்பாடி கிரிஷ்டி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, வேலூர்   புனித மரியன்னை மகளிர்  மேல்நிலைப்பள்ளி, வள்ளல் கிருஷ்ணசாமி முதலியார்  சிபிஎஸ் மேல்நிலைப்பள்ளி, சென்னாங்குப்பம் வித்யாலட்சுமி சிபிஎஸ் மேல்நிலைப்பள்ளிகளை சார்ந்த 1000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்குபெற்ற கண்கவர்  இசைநடன கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது இந்த நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைத்து பள்ளிகளுக்கும் கலெக்டர் பாராட்டி நினைவு பரிசுகளை வழங்கினார்.


இந்த விழாவிற்கு பிறகு வேலூர்  கோட்டை சுற்று சாலையில் உள்ள சேவா சமாஜம் பார்வையற்றோர்  பள்ளிக்கு சென்று தேசிய கொடியை கலெக்டர் ஏற்றி இனிப்புகளை வழங்கினார்கள். அதனைத்தொடர்ந்து அலுவலர்  குழுமத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார்கள். இந்நிகழ்ச்சியில் வேலூர்  மண்டல காவல் துறை துணைத்தலைவர்  காமினி,  காவல் கண்காணிப்பாளர்  பிரவேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பார்த்தீபன், சப் கலெக்டர் வேலூர்  கணேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்  மாலதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தாட்சாயிணி, மாவட்ட கல்வி அலுவலர்  சா.மாரிஸ், மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள், துணை ஆட்சியர்கள், வட்டாட்சியர்கள் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.