பெண் காவல் உதவி ஆய்வாளர் சுட்டுக் கொலை!

டெல்லியில் இன்று தேர்தல் நடைபெறும் நிலையில் பெண் காவல் உதவி ஆய்வாளர் சுட்டுப் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பத்பர்கன்ஞ் தொழிற்பேட்டை காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக ப்ரீத்தி என்பவர் பணி புரிந்து வந்தார். நேற்றிரவு ரோஹினி என்ற பகுதியில் துப்பாக்கி குண்டுகள் உடலில் பாய்ந்த நிலையில் ப்ரீத்தி சட‌லமாக கிடந்துள்ளார். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
ரோஹினி பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ப்ரீத்தியை தலையில் சுட்டுக் கொலை செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. நிகழ்விடத்திலிருந்த‌ அனைத்து சிசிடிவி காட்சிகளையும் சேகரித்து விசாரணை மேற்கொள்‌ளப்பட்டுள்ளது‌. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் இன்று நடைபெறும் நிலையில் பெண் உதவி ஆய்வாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.