கால்நடை மருந்தகத்தினை பயனாளிகளுக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கப்பட்டது!!. 

ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், வேலம்பாளையம் பகுதியில்  மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சார் கே.சி.கருப்பணன்  மற்றும் மாண்புமிகு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் .உடுமலை கே.ராதாகிருஷ்ணன்  ஆகியோர்  தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகத்தினை திறந்து வைத்து, 50 பயனாளிகளுக்கு ரூ.20.11 இலட்சம் மதிப்பிலான விலையில்லா கறவை மாடுகளை வழங்கினார்கள்.
 


கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் மாட்டினங்களை பாதுகாக்கும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  வரும் பிப்ரவரி 9-ம் தேதி ரூ.1,000. கோடி மதிப்பீட்டில் 1700 ஏக்கர்  பரப்பளவில் தெற்காசியாவிலேயே மிக பிரம்மாண்டமான கால்நடைப் பூங்கா அமைக்க விரைவில் அடிக்கல் நாட்டவுள்ளார்கள். 
மேலும் கால்நடை பராமாpப்புத்துறையின் சாh;பில், கால்நடை அவசர மருத்துவ ஊh;தியான ‘அம்மா ஆம்புலன்ஸ்” சேவையினை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாகனத்தின் மூலம் கால்நடைகளுக்கு தேவையான மருந்துகள்ள வழங்கப்படுகிறது. மேலும் கால்நடைகளுக்கு தேவையான முதலுதவி சிகிச்சை முறைகள் அலைபேசியின் வாயிலாக தொpவிக்கப்படுகிறது.  இச்சேவையினை பெற 1962 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.


மேலும் கோபிசெட்டிபாளையத்தில் 24 மணிநேரமும் இயங்கக்கூடிய பல்நோக்கு சிகிச்சை மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடா;ந்து வேலம்பாளையம் கால்நடை கிளை நிலையம் கால்நடை மருந்தகமாக தரம் உயர்த்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ்  ரூ.7.5 இலட்சம் மானியத்தில் மின்சார புல் நறுக்கும் கருவி 50 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் ரூ.45 இலட்சம் மானியத்தில் மின்சார புல் நறுக்கும் கருவி கால்நடை பராமரிப்புத்துறை மூலம் 210 அலகுகள் மற்றும் ஈரோடு ஆவின் மூலம் 90 அலகுகள் என 300 பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது. தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ்  மின்சார புல் நறுக்கும் கருவி 28 அலகுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் கால்நடை பராமாpப்புத்துறை மூலம் 23 அலகுகள் மற்றும் ஈரோடு ஆவின் மூலம் 5 அலகுகள் ரூ.4.20 இலட்சம் மானியத்தில் 28 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நடமாடும் கால்நடை மருத்துவ அவசர சிகிச்சை ஊர்தி 16.11.2019 அன்று முதல் பயன்பாட்டுக்காக துவக்கி வைக்கப்பட்டது. இவ்வூர்தி மூலம் நவம்பர் 2019 மாதம் முதல் ஜனவரி 2020 மாதம் வரை 1021 அழைப்புகள் பெறப்பட்டு 329 பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு 770 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்  என்.கிருஷ்ணராஜ், கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் சி.ஜெயராமன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர்  குழந்தைசாமி, பவானி ஊராட்சி ஒன்றிய தலைவர்  பூங்கோதை வரதராஜன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் க.விஸ்வநாதன், சிவகாமி சரவணன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். 


Previous Post Next Post