மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் இருந்தவர் இளைஞர்கள் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்!!
ஆதரவின்றி மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் இருந்தவர் இளைஞர்கள் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.

 


 

கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்டு ரோடு பகுதியில் ஆதரவின்றி ஆடைகள் இல்லாமல்  மனநலம் பாதிக்கப்பட்டு 50 வயது தக்க ஒருவர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக  உணவு இல்லாமல் இருப்பிடம் இல்லாமல்   நெடுஞ்சாலை பகுதியில் அலைந்து  கொண்டிருந்தார். அவ்வழியே தினந்தோறும் நிறைய மனிதர்கள் கடந்து செல்லும் நிலையில் பாசார் மக்கள் பாதை  இளைஞர்கள் மற்றும் வேப்பூர் மனிதநேய குடும்பம் வாட்சப் குழுவினர் கண்டு அவரை குளிக்க வைத்து ஆடைகள் அணிய வைத்து பெரம்பலூர் வேலா கருணை இல்லம் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறு வாழ்வு மையத்தில் சேர்த்தனர். இவர்களின் சேவை பணியை கண்டு சமூக ஆர்வர்கள் இளைஞர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.உடன்வேலா காப்பகம்  நிறுவனர் அருண்குமார் ,பாசார் செல்வேந்திரன், துளிர் விஜய், பில்லூர் வினோத், சிற்றரசு, குமரேசன்,மற்றும் இளைஞர்கள் இருந்தனர்.

 

  

Previous Post Next Post