தூத்துக்குடியில் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை - போலிசார் விசாரணை!!!

தூத்துக்குடியில் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை - போலிசார் விசாரணை!!!


தூத்துக்குடி திரேஸ்புரம்  சங்கு குளி காலனியை சேர்ந்தவர் ராஜா. மகன் எட்வர்ட் (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அங்குள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த சில நாட்களாக பள்ளி செல்லவில்லை வீட்டில் பெற்றோர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று திட்டி உள்ளனர். நேற்று பள்ளியில் இருந்து ஆசிரியர்கள் வீட்டிற்கு வந்து பொது தேர்வு வரவுள்ளது என்ற நிலையில் பள்ளிக்கு வர வேண்டும் என்று அறிவுரை கூறினார்கள். 


இந்நிலை இன்று மதியம் யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.


இது குறித்து வடபாகம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.