நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!!
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

 


 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கொரக்கை கிராமத்தில் மனுநீதி நாள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் நடைபெற்றது. திட்டக்குடி தாசில்தார் செந்தில்வேலன் தலைமை தாங்கினார். இதில் விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரவீன்குமார் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா மற்றும் வேளாண்மை துறை தோட்டக்கலை துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் நலத்திட்ட உதவிகளை 117 பயனாளிகளுக்கு 19 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 


 

இந்நிகழ்ச்சியில் திட்டக்குடி சமூக பாதுகாப்பு வட்டாடட்சியர் ரவிச்சந்திரன்,வேளான்துறை உதவி இயக்குநர்கள்,தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள்  ஊராட்சி மன்ற தலைவர்கள்  மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

  

Previous Post Next Post