தி.மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்  ஊராட்சி செயலாளர்கள் கூட்டம்


திருவண்ணாமலை பிப். 5- திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவகத்தில் ஊராட்சி செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) டாக்டர் ஜி.அரவிந்த் தலைமை தாங்கினார். ஆணையாளர் தி.அண்ணாதுரை முன்னிலை வகிக்க வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) ஆர்.ஆனந்தன் அனைவரையும் வரவேற்று பேசினார். கூட்டத்தில் ஊராட்சி கணக்குகளை பிரியா சாப்ட்வேர் மற்றும் படிவம் 30ன் மூலம் விரைவாக கணினியில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் ஊராட்சியின் வரவு செலவுகளை அரசு புதியதாக நடைமுறைப்படுத்தியுள்ள பிஎப்எம்எஸ் மூலம் பணபரிவர்த்தனை செய்யும் பணிகளை ஊராட்சி செயலாளர்கள் உங்கள் ஊராட்சியில் உள்ள கணினி மூலம் செய்திட வேண்டும் விரைவாக அந்தந்த ஊராட்சி செயலாளர்கள் ஊராட்சி மன்ற தலைவர்களிடம் ஊராட்சி வரவு செலவு பராமரிப்பு பதிவேடுகளை வழங்கிட வேண்டும் என உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) டாக்டர் ஜி.அரவிந்த் ஊராட்சி செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த கூட்டத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 69 ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.