உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு

திருவண்ணாமலை அடுத்த வைப்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பாபு நினைவு தரும அறக்கட்டளை சார்பில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. இம்முகாமிற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமைஆசிரியை தே.திருமகள் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் மீனாட்சி சம்பத் சமுதாய முன்னேற்ற அறக்கட்டளை நிறுவனர் பி.ரவி ஆகியோர் முன்னிலை வகிக்க, பாபு நினைவு தரும அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் ஏ.பாரிவள்ளல் அனைவரையும் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மருத்துவர் பி.சிற்றரசன் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு வாயில் புற்றுநோய் உள்ளதா என பரிசோதனை செய்து புற்றுநோய் விழிப்புணர்வு பற்றி ஆலோசனை வழங்கினார். இந்த முகாமில் செயலாளர் டி.குமதவள்ளி, தீபமலை மருந்தகம் டாக்டர் ஆர்.அரிகோவிந்தன், மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் தி.மலை தீபம் செயலாளர் பி.நாசர் பாஷா நன்றி கூறினார்.