கேரளாவில் கொரோனா: தமிழக எல்லையில் கண்காணிப்பு

 


தமிழகத்தில் இது வரை கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை என்றாலும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தயார் நிலையில் உள்ளதாக மாநில சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.


சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சீனாவில் இருந்து தமிழகத்திற்கு வந்த 36 நபர்களில் 32 பேருக்கு கொரானா பாதிப்பு இல்லை என்று மருத்துவ அறிக்கை வந்துள்ளதாகவும், 4 பேரின் அறிக்கை இது வரை கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.


கேரளாவில் கொரானா தொற்று உறுதியாகி உள்ளதால், 5 எல்லை மாவட்டங்களில் உள்ள மக்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் பீலா ராஜேஷ் கூறினார்.