போடிநாயக்கனூரில் ஒருநாள் சுய ஊரடங்கு

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய நோயான கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இந்திய அரசு அறிவித்த ஒருநாள் சுய ஊரடங்கு உத்தரவுக்கு வர்த்தக நிறுவனங்கள் 100% மூடப்பட்டு பொதுமக்கள் ஆதரவளித்து வருகின்றனர். அரசு போக்குவரத்து தனியார் போக்குவரத்து இயங்காமல் வெறிச்சோடி காணப்படும் போடி பேருந்து நிலையம்.


இந்த கொடிய நோயின் தீவிரத்தை உணர்ந்து பொதுமக்கள் அரசு அறிவித்த சுய ஊரடங்கு உத்தரவுக்கு ஆதரவளித்து வருகின்றனர். போடி  நகராட்சியினர் பேருந்து நிலையம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் கிருமி நாசினிகளை தெளித்து வருகின்றனர்.