அமைச்சுப் பணியாளர்களுக்கு எஸ்பி அருண் பாலகோபாலன் பாராட்டு

தூத்துக்குடி மாவட்ட அளவில் நடைபெற்ற  விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற காவல்துறை அமைச்சுப் பணியாளர்களை மாவட்ட எஸ்பி அருண் பாலகோபாலன்  பாராட்டினார்.

 

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

தூத்துக்குடி மாவட்டத்தில் வணிகவரித் துறை, வருவாய்த் துறை, நீதித்துறை, கல்வித்துறை, சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றி வரும் அரசுப் பணியாளர்களுக்கிடையே 2019-2020ம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டி தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடை பெற்றது. இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட  அரசுப்பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

 

இதில்  தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்திலும், உயரம் தாண்டுதல், ஒற்றையர் மற்றும் இரட்டையர் மேஜை பந்துப் போட்டி ஆகிய 4 விளையாட்டுக்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். கபடி போட்டியில் இரண்டாமிடத்தைப் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர். 

 

400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் காவல்துறை அமைச்சுப் பபணியாளர்கள்  மயில்குமார், சேர்மத்துரை, கதிரேசன் மற்றும் பெரியசாமி ராஜா ஆகியோரும், உயரம் தாண்டுதலில் செந்தில் விநாயகப்பெருமாளும், ஒற்றையர் மேஜை பந்துப் போட்டியில் குமார், இரட்டையர் மேஜை பந்துப் போட்டியில் குமார் மற்றும் ஆவுடையப்பன், கபாடி போட்டியில் கணேசபெருமாள், மேண்ட்லி, பாலகிருஷ்ணன், முனியசாமி, கோபிநாத், ராமஜெயம், ராஜபெருமாள், ராஜ்குமார் மற்றும் சிலர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அருண் பாலகோபாலனிடம் வாழ்த்து பெற்றனர்.