கோபியில் வட மாநிலம் சென்று வந்த இளைஞர் கண்காணிப்பு

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 144தடை உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில்  ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே அளுக்குளி ஊராட்சி  கோபிபாளையம் பகுதியில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் வேலை செய்து வந்த  நபர் கடந்த சனிக்கிழமை கோபி வந்ததை தொடர்ந்து அப்பகுதி கிராம நிர்வாக அதிகாரிகள் அருண்குமார், சங்கர்குமார் ஆகியோருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த நபரின் வீட்டிற்கு சென்று விசாரணை செய்து அவருக்கு வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும், அடிக்கடி கைகளை கழுவி சுத்தமாகவும், தூய்மையாகவும் இருக்க அறிவுறுத்த பட்டது. அருகில் அளுக்குளி ஊராட்சி மன்ற தலைவர் பி.இந்துமதிபாண்டு, ஊராட்சி கழக செயலாளர் கே.பாண்டுரங்கசாமி, ஊராட்சி செயலர் கருப்புசாமி,கிராம உதவியாளர்கள் ஆகியோர் உள்ளனர்.