ஆமத்தூர் ஊராட்சியில் நோய்த்தடுப்பு பணிகளில் அதிரடி: ஊராட்சித்தலைவருக்கு பொதுமககள் பாராட்டு

விருதுநகர் மாவட்டம், ஆமத்தூர் ஊராட்சி தலைவர் குறிஞ்சி மலர் அழகர்சாமி, கொரோனா நோய்த்தடுப்புக்காக தீவிரமாக பணி செய்து வருகிறார்கள். ஊராட்சிப் பகுதியில் பல இடங்களில் விழிப்புணர்வு தட்டிபோர்டுகள் வைக்கப்பட்டு உள்ளது. ஆமத்தூரில் உள்ள குடிநீர் தொட்டி உள்ளிட்ட இடங்களில் ஊராட்சி தலைவர் குறிஞ்சிமலர் அழகர்சாமி ஏற்பாட்டில் கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டு உள்ளது. மேலும் ஊராட்சிப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வீடில்லாதோர், ஏழைகள் என அனைவருக்கும் ஊராட்சி தலைவர் குறிஞ்சிமலர் அழகர்சாமி உணவு வழங்கி வருகிறார்.


இத்துடன் ஊராட்சி பகுதியில் உடனுக்குடன் தூய்மைப்பணிகளை மேற்கொள்ளவும், கிருமிநாசினி தெளிக்கவும் உத்தரவிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. 


ஊராட்சி தலைவர் குறிஞ்சிமலர் மற்றும் அவரது கணவர் அழகர்சாமியின் இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை அனைவரும் பாராட்டினார்கள்.