தமிழகத்தில் இன்று 33 பேருக்கு கொரோனா: மொத்தம்1629 பேருக்கு பாதிப்பு, 662 பேர் குணமடைந்து வீட்டுக்கு சென்றனர்

கொரோனா தொற்று பரவல் மிக வேகமாக இருந்து வரும் நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது.


 


தமிழகத்தில் இன்று 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த எண்ணிக்கை 1629 ஆக எண்ணிக்கை உயர்ந்து உள்ளது. இதுவரை 662 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.


சென்னையில் இன்று 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டுள்ளது. மொத்தமாக 373 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.


கோவை, திருப்பூரில் இன்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயரவில்லை. 


கொரோனா தொற்றால் இன்று மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரம்:


சென்னை-15, அரியலூர்-2, திண்டுக்கல்-1, காஞ்சிபுரம்-1, தஞ்சை-5, விழுப்புரம்-1, மதுரை-4, திருவள்ளூர்-2, திருவண்ணாமலை-1, திருச்சி-1.


இன்று மட்டும் 5,904 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. மொத்தமாக இன்று வரை 53,072 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. 


23,760 பேர் வீட்டுக்கண்காணிப்பில் உள்ளனர். 


Previous Post Next Post