இந்தியாவில் முதல்முறையாக கிருமிநாசினி பாதை

திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் சர்னிதா வெங்கடேஷ் என்பவர் ஏற்பாட்டில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி இணைந்து கிருமிநாசினி பாதை அமைக்கப்பட்டுள்ளது.


 


வீடியோ இதோ:




சந்தைப்பேட்டை மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் இந்த கிருமி நாசினி பாதையின் வழியாக உள்ளே சென்று வெளியே வந்த பின்னரே மார்க்கெட்டுக்கு அனுப்பப்படுகிறார்கள்.


 



இந்த கிருமி நாசினி பாதையில் தண்ணீரில் கலக்கப்பட்ட கிருமி நாசினி மருந்து உடல் முழுவதும் ஸ்பிரே செய்யப்பட்டு கிரிமினல் கிருமிகள் அழிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். 



மேலும் இந்தியாவிலேயே முதல்முறையாக கிருமிநாசினி பாதை அமைக்கப்பட்டுள்ளது திருப்பூரில் தான் என்றும் தெரிவித்தனர்.



திருப்பூரில் இன்று வழக்கம் போல காலை நேர கூட்டம் காணப்பட்டது. மார்க்கெட், மளிகை கடைகளில் கூட்டம் குறையவில்லை. நாட்டு மருந்துக்கடைகளில் கபசுரக்குடிநீர் தேடி பொதுமக்கள் அலைந்தனர். ஆனால் பெரும்பாலான கடைகளில் கிடைக்கவில்லை.



மெடிக்கல்களில் மாஸ்க்குகள் 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை அதிக விலையிலேயே விற்கப்படுகின்றன. இதை யாரும் கட்டுப்படுத்த முனையவில்லை.



திருப்பூர் பெருமாள் கோவில் அருகில் வி்ற்கப்படும் நெல்லிக்காய் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். 


வெளியூர் செல்வதற்கு தாலுகா அலுவலகங்களில் பொதுமக்கள் தகுந்த காரணங்கள், ஆவணங்களுடன் விண்ணப்பித்து பாஸ் பெற்றுச் சென்றனர். 



நாம் தமிழர் கட்சியின் சார்பில், திருப்பூர் புது பஸ் ஸ்டாண்ட் மற்றும் டதென்னம்பாளையம் சந்தைபேட்டை பகுதிகளில் திருப்பூர் மாவட்ட தலைவர் ரத்னா ஜெ.மனோகர் தலைமையில் பொதுமக்கள் 1000 பேருக்கு இலவச மாஸ்க் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில், பல்லடம் தொகுதி செயலாளர் வீரமணிகண்டன், இணை செயலாளர் துரை பாலு, துணை செயலாளர் தங்கராஜ், பொருளாளர் கோல்டுசன், கரும்புலி சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Previous Post Next Post