தொழுதூர் ஊராட்சியில்  வடமாநிலத்தை சேர்ந்த 50 குடும்பங்களுக்கு  50000 மதிப்பில் அத்தியாவசிய பொருட்கள்




தொழுதூர் ஊராட்சியில்  வடமாநிலத்தை சேர்ந்த 50 குடும்பங்களுக்கு  50000 மதிப்பில் அத்தியாவசிய பொருட்கள் சமூக ஆர்வலர்கள் வழங்கினர்.

 

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

கடலூர் மாவட்டம் ராமநத்தம் ,அரங்கூர் ,தொழுதூர் பகுதிகளில் நோபளம், மகாராஷ்டிரா,உத்திரபிரதேசத்தைச்சேர்ந்த கூர்கா, கட்டிட வேலைசெய்துவந்த சுமார் 50 குடும் பங்களைச்சேர்ந்த வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ அரசு கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முன்னிட்டு 144 தடை உத்திரவு பிறப்பித்து உள்ளநிலையில் அவர்கள் தங்கள் வாழ்வாதாரம் பதிக்கப்பட்டு உணவு இல்லாமல் சிறமப்பட்டனர். ராமநத்தம்  மற்றும் தொழுதூர் கிராம நிர்வாக அலுவலர்கள் 

வினோத்குட்டிகண்ணா, ராசு ஆகியோர்  கிராம பொது மக்கள் சமூக ஆர்வலர்களிடம் 

அவர்களுக்குஉதவிசெய்யுமாறு வலியுறுத்தலின் பெயரில் 

 

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

நேற்று ராமநத்தம் சமுக ஆர்வலரும் ஹோட்டல் உரிமையாளருமான ஈஸ்வரிஅய்யம் பெருமாள் மற்றும் கவிதா,நிர்மலா,முருகேசன் ஆகியோர் அடங்கிய சமூக ஆர்வலர் குழுவினர் மற்றும் பலாஜி ,கண்ணதாசன் மற்றும் அரங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா ,அரங்கூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்வம்,தொழுதூர் ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன் , தொழுதூர் உராட்சி மன்ற துணைத்தலைவர் ரியாஸ்பானு

அன்சாரி மற்றும் மாயக்கிருஷ்ணன் ,கோவிந்தசாமி ஆகியோர் சுமார் 50000 மதிப்பிலான காய்கறி, 100 கிலோஅரிசி, கோதுமைமாவு, மளிகை பொருட்களை வழங்கினர். பொருட்களை பெற்றுக்கொண்ட வடமாநிலத்தவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர் கண்ணீர்மல்க நன்றி கூறினர்.


 

 



 

Previous Post Next Post