6 குழந்தைகளுக்கு கொரோனா சரியாயிடுச்சு... 27 பேரை வீட்டுக்கு அனுப்பிட்டாங்க... திருப்பூருக்கு நல்லநேரம் ஆரம்பிச்சாச்சு

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை கடந்த வாரத்தில் விறுவிறுவென உயர்ந்தது. இதுவரை 110 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.


இதனால், கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில்,  தமிழகத்தில் 3 வது இடத்தில் இருக்கிறது திருப்பூர்.


இதில் ஏற்கனவே 14 பேர் குணமடைந்து சென்ற நிலையில், 95 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். திருப்பூர் மக்களும் தினமும் மாலை கொரோனா அப்டேட் பார்த்து இனிமேல் எண்ணிக்கை உயரக்கூடாது என்று அவரவர் கடவுளை வேண்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.


இன்று மாலை திருப்பூர் மாவட்டத்துக்காரர் ஒருவருக்கு மட்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 


இந்த நிலையில், திருப்பூர் மக்களுக்கு இன்னுமொரு நல்ல செய்தி கிடைத்திருக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா பாதிக்கப்பட்டு கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 13 பேர் இன்று ஒரே நாளில் பூரண குணமடைந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.


15 பேர் குணமடைந்த நிலையில்இன்னும் இருவர் குணமடைந்த பின்னும் தனிப்பட்ட காரணத்துக்காக மருத்துவமனையில் இருக்கிறார்கள். 


இதில் முக்கியமான விஷயம் என்னன்னா.., குணமடைந்தவர்களில் 6 பேர் 10 வயதுக்குட்ப்பட்ட குழந்தைகள்.


’போட்றா வெடிய’... அப்டின்னு கத்த தோணுதா.. ஆமாங்க, நிச்சயமா இது திருப்பூர்காரர்களுக்கு சந்தோஷமான விஷயம் தான். சந்தோசமா வீட்லயே ஸ்வீட் சாப்பிட்டு கொண்டாடுங்க.



இன்னும் 81 பேர் மட்டும் தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களும் இன்னும் சில நாட்களில் குணமடைந்து வீடு திரும்ப வாய்ப்புகள் அதிகரித்து உள்ளது. திருப்பூர் மாவட்டத்துக்காரர்கள் அனைவரின் உடல் நிலையும் சீராக இருக்கிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 


வீட்டுக்கண்காணிப்பில் இன்னும் 908 பேர் உள்ளனர். 


இன்று வீட்டுக்கு அனுப்பப்பட்ட அனைவரையும் கோவை இஎஸ்.ஐ. மருத்துவமனையில்  மருத்துவத்துவ துறை அலுவலர்கள் கைதட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். 


Previous Post Next Post