திருப்பூரில் 60 பேருக்கு கொரோனா: திருப்பூர் மாநகர், அவிநாசியில் பாதிப்பு அதிகம்

திருப்பூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்ட தினம் முதல் நேற்று வரையிலும் 26 பேர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருந்தனர் இன்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் திருப்பூர் மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 35 பேர் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.( படம்: திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் தற்காலிக மருததுவமனை அமைக்கப்பட்டு உள்ள கட்டிடம்)


-------------------------------------------------------------


இதன் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது இதில் முதலாவதாக உறுதி செய்யப்பட்ட நபர் முழுமையாக குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார்.


எனவே தற்பொழுது 60 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இவர்கள் அனைவரும் கோவையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 35 பேரில் ஆண்கள் 17 பேர் மற்றும் பெண்கள் 18 பேர் என தெரியவந்து உள்ளது. குறிப்பாக திருப்பூரில் 11 பேர் அவிநாசியில் 15 பேர் மங்கலத்தில் இரண்டு பேர் மற்றும் தாராபுரத்தில் 7 பேர் என 35 பேர் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 


தற்பொழுது பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் ஒரே தொற்றில் தொடர்புடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.