அம்பேத்கர், தீரன்சின்னமலை பிறந்தநாளில் நினைவிடங்களுக்கு செல்வதை தவிருங்கள்: ஈரோடு போலீஸ் எஸ்.பி சக்திகணேசன் வேண்டுகோள்

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14ஆம் நாள் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் மற்றும் ஏப்ரல் 17-ம் நாள் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் கடந்த 11.04.2020 அன்று காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்ட பொழுது பொது மக்கள் நலன் கருதியும் கொரோனா வைரஸ் தொற்று பரவால் தடுக்கும் நோக்கத்திலும், ஊரடங்கு உத்தரவை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும்,பொதுமக்கள் கூடும் அனைத்து நிகழ்ச்சிகளிலும், விழாக்களும் ரத்து செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்கள்.


இதன்படி வருகிற 14 ஆம் தேதி அன்று டாக்டர் அம்பேத்கர் அவர்கள் பிறந்த நாள் மற்றும் ஏப்ரல் 17ஆம் தேதி அன்று சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சிகளில் 144 தடை உத்தரவு காரணமாக மேற்கொண்ட நிகழ்வுகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மட்டுமே மாலை அணிவித்து மரியாதை செய்வார்கள் எனவும்,நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் எனவும், மேலும் நினைவிடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. எனவே பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்புகள் இதற்கு ஒத்துழைப்பு தருமாறு ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்திகணேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.