கொரோனா நிவாரண பொருட்கள் மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் வழங்கினார்

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த நெய்வாநத்தம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் உள்ள உடல் ஊனமுற்றோர் முதியோர் தூய்மை காவலர்கள் மற்றும் 100 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி பருப்பு காய்கறிகள் மற்றும் முகக்கவசம் அடங்கிய தொகுப்பு பையை அம்மாவின் வழியில் நடைபெறும் நல்லாட்சியில் மக்கள் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி துணை முதல்வர் மாண்புமிகு ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் ஆசியுடனும், மண்ணின் மைந்தர் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் படியும், செய்யாறு சட்டமன்ற உறுப்பினரும் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளருமான தூசி கே.மோகன் ஆகியோர் ஆலோசனைப் படியும், திருவண்ணாமலை மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் த.செந்தில்குமரன் தனது சொந்த செலவில் கிராம பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்புக்கான முகக்கவசம் மற்றும் அரிசி, பருப்பு காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பு பையினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வேட்டவலம் அனைத்து வியாபாரிகள் நலச்சங்க தலைவர் த.சிவசங்கரன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்னாள் இயக்குனர்கள் வரதா ராமானுஜம், கண்ணப்பன் மற்றும் தன்னார்வலர்கள் ராம.முருகன், பி.செந்தில்நாதன், நெய்வாநத்தம் கமலக்கண்ணன், மற்றும் வார்டு உறுப்பினர்கள் தனபால், கிருஷ்ணன் மற்றும் மகாலிங்கம், கந்தசாமி, செல்வராஜ், ஆகியோர் கலந்து கொண்டனர்.


Previous Post Next Post