உண்டியல் பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கொடுத்த பழனி சிறுவர்கள்


கொரோனா நிவாரணதிக்காக உங்களால் முடிந்த அளவு நிதியினை அரசுக்கு வழங்கலாம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் பழனி 22வது வார்டு பகுதியை சேர்ந்த ராஜா முகம்மது என்பவருடைய மகன்கள் சிராஜ் தீன் மற்றும் ரியாஸ் தீன் ஆகிய இருவரும் தன் வீட்டில் சேர்த்து வைத்த உண்டியல் பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்காக்க பழனி சார் ஆட்சியர் உமா அவர்களிடம் வழங்கினார்கள். சிறுவர்களின் இந்த செயலை சார் ஆட்சியர் உமா மற்றும் அதிகாரிகள் பாராட்டினார்கள்.