கோபியில் இரு இடங்களில் கிருமிநாசினி சுரங்கப்பாதை: அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட நகராட்சியில்  தமிழ்நாடு முதலமைச்சரின்  ஆணைக்கிணங்க தமிழக  பள்ளிக் கல்வி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் அவர்கள்  மாவட்ட ஆட்சித் தலைவர் கதிரவன்  தலைமையில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளின்  தொடர்ச்சியாக கோபிசெட்டிபாளையம் நகராட்சி பேருந்து நிலையத்தில் தோட்டக்கலை துறையின் சார்பில் பொதுமக்களுக்கு வீடு தேடி சென்று காய்கறிகளை விற்பனை செய்யும் விதமாக நடமாடும் காய்கறி விற்பனையை தொடங்கி வைத்தார். மேலும்  கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள காய்கறி சந்தைக்கு வரும் பொதுமக்களின் நலன் கருதி கோபி ரோட்டரி சங்கம் சார்பில்  கிருமிநாசினி தெளிக்கும் சுரங்க நடைபாதை அமைக்கப்பட்டிருந்ததை பார்வையிட்டார். தொடர்ந்து  கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் கால்நடைகள் மேய்க்க ஏதுவாக அவர்களுக்கு அனுமதி சீட்டு  வழங்க பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பின் போது...
கோபியிலிருந்து பரிசோதனைக்கு  அழைத்துச்சென்ற மூவருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதியாகியுள்ளது.
11,771 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய  பொருட்கள்  வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கால்நடை வளர்க்கும் 31 நபர்களுக்கு தீவனங்கள் கொண்டு செல்ல அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. 
தினசரி காய்கறி சந்தை மற்றும் அரசு மருத்துவமனை ஆகிய இரு இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் சுரங்க வழி பாதை அமைக்கப்பட்டுள்ளது.
தனியார்பள்ளி தினசரி காய்கறி சந்தை வணிகர் சங்கம் மற்றும் வேளாண்மை  தோட்டக்கலைத்துறை ஆகியேயர் சார்பில் நடமாடும் காய்கறி சந்தை வாகனம் இயக்கப்பட்டுவருகிறது.
தனியார் நூற்பாலை சார்பில் முதலமைச்சரின் நிவாரண நிதியாக ரூ.15 லட்சம் வழங்கியுள்ளனர்.
தனியார் பள்ளியின் சார்பில் அவசர ஊர்தி ஏறபாடுசெய்துள்ளனர். அதில் மருத்துவர் செவிலியர் இருப்பர் உடனுக்குடன் நோயாளிகளை பறிசோதனை செய்து சிகிச்சை அளிக்க அதில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் வேலை இல்லாத தொழிலார்களுக்கு என்னென்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்ற கேள்விக்கு, தொழிற்சங்கங்கள் எங்கெங்கு உள்ளதோ அந்த கேம்பஸில் தங்கி இருக்கும் தொழிலார்களுக்கு அங்கேயே சென்று உணவு வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ 1000நிதி உதவி வழங்க முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார் எனவும் கூறினார். 


பின்னர் ஈரோடுமாவட்ட ஆட்சியர் கதிரவன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது 


ஈரோடுமாவட்டத்தில் 28 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இன்னும் 15 நபர்களுக்கான பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது. 50 நபர்களுக்கு தொற்று இல்லை என முடிவுகள் வந்துள்ளது.
ஈரோடுமாவட்டத்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். நாள்தோறும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
தனிநபர் கொரோனா தொற்று இதுவரை யாருக்கும் ஏற்படவில்லை.
தனிமைப்படுத்தப்பட்டோர்களின் கைகளில் வைக்கப்படும் முத்திரையினால் எந்தவித தோல் தொற்றும் ஏற்படாது எனவும் 
என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இதில் கோட்டாட்சியர் ஜெயராமன் முனிசிபல் கமிஷனர் தாணு மூர்த்தி, கோபி ரோட்டரி சங்க நிர்வாகிகள்,டி.ஜி.என். கே.சண்முக சுந்தரம், தலைவர் அருண்குமார், திட்ட இயக்குனர் எஸ். கார்த்திகேயன், மருத்துவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Previous Post Next Post