ஊரடங்கு சமயத்தில் தேவையறிந்து உதவி வரும் மணியம் எலக்ரிக்கல்ஸ் இந்திரா சுந்தம்


கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நிலையில் திருப்பூர் பி.என் ரோடு மேட்டுபளையம் பகுதில் சிலர் தங்கி கட்டிட வேலை செய்து வந்துள்ளனர். ஊரடங்கு காரணமா அவர்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல முடியாமலும், சாப்பாட்டிற்கும் கஷ்டப்படும் வந்தனர். இதனை அறிந்த சில இளைஞர்கள் அவர்களை அழைத்து வந்து புஸ்பாதியேட்டர் பஸ் நிலையம் அருகில் உள்ள அரசு பள்ளியில் தங்க வைத்துள்ளனர். இந்த தகவலறிந்து மணியம் எலக்ரிக்கல்ஸ்  இந்திரா சுந்தம் (ரோட்டரி எவரஸ்ட்) அவர்களுக்கு தோவையான பொருட்களை வழங்கினார். இங்கு மொத்தம் 30 நபர்கள் தங்க வைக்கப் பட்டுள்ளனர். ஒவ்வொரு வருக்கும் பாய், வேஸ்டி, சட்டை, துண்டு, குளியல் சோப், துணி துவைக்கும் சோப், சேம்பு, தேங்காய் எண்ணெய், முக கவசம் ஆகிய பொருட்களை வழங்கினார். இது பற்றி அவர் பேசுகையில் :-



கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் ரோடோரத்தில் தங்கி இருப்பவர்களும், வெளியூரில் இருந்து இங்கு வந்து தங்கி வேலை செய்பவர்களும் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களுக்கு அரசு, பள்ளிகள், மண்டபங்களில் தங்க வைத்து வசதிகளை செய்து வருகிறது. மேலும் அத்தியாவசிய தேவைகள் பற்றாக்குறைகளை தெரிந்து கொண்டு தேவையான உதவிகளை நான் செய்து வருகிறேன்.

 

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

அதே போல் இங்கு தங்க வைக்கப்பட்டுல்ல 30 நபர்களுக்க தேவையான துணி, பாய் உற்பட அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ளேன். மேலும் காலேஜ் ரோடு திருப்பூர் சேவா சமூதியில் தங்க வைக்கப்பட்டுள்ள 45 நபர்களும் இதே போல் அனைத்து பொருட்களும் வழங்க உள்ளோம். நேற்று எனக்கு தகவல் கிடைத்ததும் 75 நபர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்து விட்டேன். என்னை போல் தனி நபர்களும் பொது நல அமைப்புகளும் அரசுடன் சேர்ந்து உதவி வருகிறோம் ஊரடங்கை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு தெரிவித்தார்.

Previous Post Next Post