பேத்தியின் வளைகாப்புக்கு ரூ.1 லட்சம் தந்த தந்தையை போட்டுத்தள்ளிய மகன் கைது

வேப்பூர் அருகே செலவுக்கு பணம் தராத தந்தையை கல்லால் அடித்து கொலை செய்த மகனை போலிசார் கைது செய்தனர்


கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள நகர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பன் மகன் முருகேசன் (வயது 70),  பன்றிகள் மேய்க்கும் தொழிலாளி,  இவரது மகன் கொளஞ்சி என்ற கருப்பன் வயது(45) என்பவரும் தனியாக பன்றி மேய்த்து வருகிறார்  


இந்நிலையில் கொளஞ்சிக்கு இரண்டு மகன் இரண்டு மகள்  உள்ளனர் மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது, மகன்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, மனைவி இறந்துவிட்டார்  இந்நிலையில்  வேப்பூரில்  திருமணம் செய்து கொடுத்துள்ள கொளஞ்சியின் மகளுக்கு இன்னும் இரண்டு நாட்களில் வளைகாப்பு நடக்க உள்ளது அதனால் முருகேசன் தன் சேமிப்பிலிருந்து ஒரு லட்ச ரூபாயை பேத்தியின் வளைகாப்பு செலவுக்கு கொடுத்துள்ளார்


இதை அறிந்த நேற்று வெள்ளிக்கிழமை மதியம் ஒரு மணியளவில் வீட்டில் இருந்த தந்தை  முருகேசனிடம்,   கொளஞ்சி ஏன் எனக்கு தெரியாமல்  என் மகளுக்கு பணம் கொடுத்தாய் எனக்கும் செலவுக்கு பணம் கொடு,  என்று கேட்டுள்ளார்,  அதற்கு முருகேசன் நீதான் தனியாக பன்றி வளர்க்கிறாயே உன் செலவை நீதான் பார்த்து கொள்ளவேண்டும் என்றும் என்னிடம் உள்ள பன்றிகள், பணம் அனைத்தும் என் பேர பிள்ளைகளுக்கு தான் தருவேன் என்று கூறியுள்ளார்  


அதனால் ஆத்திரமடைந்த மகன் கொளஞ்சி அருகிலிருந்த கல்லை எடுத்து தாக்கியதில்  சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்


இது குறித்து தகவலறிந்த கிராமத்தினர் கொளஞ்சியை தாக்கி வேப்பூர்  போலிசாருக்கு தகவல் அளித்தனர்


அதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த எஸ்ஐ, சக்திகணேஷ்  தலைமையில் வந்த போலிசார் முருகேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலை செய்த மகன் கொளஞ்சி என்ற கருப்பனை கைது செய்தனர்