நாளை ஆம்பன் புயல்...புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.


தென்மேற்கு வங்கடலில் மேலடுக்கு சுழற்சி காரணமாக குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது அது இன்று மாலை தீவிரமடைந்து புயலாக உருவாகவுள்ளது. இதற்கு ஆம்பன் என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.


இந்நிலையில் வங்கக்கடலில் புயல் உருவாகும் சூழல் உருவாகியுள்ளதை அறிவுறுத்தும் விதமாக  புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களின் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் கடற்பகுதிகள் காற்று பலமாக வீசுவதால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகின்றது.