சேத்பபட்டில் கத்தியை காட்டி வழிப்பறி செய்த 2 பேர் குண்டர் சட்டத்தில் கைதுதிருவண்ணாமலை மாவட்டம் சேத்பபட்டில் கத்தியை காட்டி வழிப்பறி செய்த, சேத்பட்டு இருதய ஆண்டவர் தெருவை சேர்ந்த மைக்கல் மகன் திலீப்குமார் (35), சேத்பட்  சவேரியா தெருவைச் சேர்ந்த அலெக்ஸ் (எ) அலெக்சாண்டர் மகன் நவீன் (24) ஆகியோரை கத்தியைக் காட்டி வழிப்பறி செய்த வழக்கில் சேத்பட்டு காவல்துறையினர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிச்சக்கரவர்த்தி பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.