சுகாதாரப் பணியாளர்களுக்கு நம்பியூர் இந்து முன்னணி சார்பாக பாத பூஜை செய்து தேனீர், பிஸ்கட் வழங்கப்பட்டது 

ஈரோடு மாவட்டம் கோபி சட்ட மன்ற தொகுதி நம்பியூர் தாலுகா நம்பியூர் பேரூராட்சியில் கொரோனா ஒழிப்புக்காக தீவிர சுகாதாரப்பணியில் ஈடுபட்டிருக்கும் துப்புரவு பணியாளர்களுக்கு நம்பியூர் இந்து முன்னணி சார்பாக பாத பூஜையும் தேனீர் மற்றும் பிஸ்கட் கொடுத்தனர்.

 


 

இவ்விழாவிற்கு சிவகுமார் ஒன்றிய செயலாளர் தலைமைஏற்றும், சசிகுமார், சம்பத் குமார்,கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தும், சிறப்பு அழைப்பாளராக மாவட்ட அமைப்பாளர் கே. ஆர். பி. பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டுனர்.