பழனி 22வது வார்டு அ.இ.அ.தி.மு.க சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் காசோலை

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

பழனி 22வது வார்டு அ.இ.அ.தி.மு.க சார்பில் கோட்டை மேடு, காமராஜர் வீதி, அன்சாரி தொரு, படிப்பாறை, காளியம்மன் கோவில், சூளைமேடு தெருவில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு நகர அம்மா பேரவை துணை செயலாளர்  M.K.E.ராஜாமுகம்மது தலைமையில் அரிசி மற்றும் காசோலைகள் வழங்கப்பட்டது.

 

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

இந்த நிகழ்வில் பழனி சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் விவேகானந்தன் கலந்துகொண்டு தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசிகளை வழங்கினார். இதில் நகர அம்மா பேரவை பொருளாளர் நாகராஜன், ரெடிமேட் வியாபாரிகள் சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன், பாஷாராஜா, 22வது வார்டு அம்மா பேரவை செயலாளர் கணேசன், துணை செயலாளர் ஜின்னா சையது அபுதாகிர், காமாட்சி மற்றும் பல கழக  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.