திருச்செந்தூரில் கோயில் அர்ச்சகர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்-

திருச்செந்தூரில் கோயில் அர்ச்சகர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்- DSP பரத் வழங்கி தொடங்கி வைத்தார்.

 


 

திருச்செந்தூரில் கொரோனா ஊரடங்கால் பாதிப்புக்குள்ளான கோவில் அர்ச்சகர்களுக்கு ரூ 8லட்சம் மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்களை  மஸ்கட் தொழிலதிபர் சார்பில் வழங்கப்பட்டது. 

 

நாடு முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக  ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஏற்கனவே தமிழகத்திலுள்ள கோவில்களில் கடந்த மார்ச் -20ந்தேதி முதல்  பக்தர்களின் வழிபாடுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. 

 

இந்த நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கைங்கரிய பணிகளில் ஈடுபடக்கூடிய கோவில் அர்ச்சகர்கள் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வருமானமின்றி பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட கோவில் அர்ச்சகர்களுக்கு மஸ்கட் தொழிலதிபர் பெரியசாமி உதவிக்கரம் நீட்ட முன்வந்தார். 

 

இதனைத்தொடர்ந்து 500- அர்ச்சகர் குடும்பங்களுக்கு  ரூ 8-லட்சம் மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்களான அரிசி,  எண்ணெய்,  பருப்பு, சீனி,  உள்ளிட்ட 18-வகையான மளிகைப்பொருட்களை திருச்செந்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பரத் வழங்கி தொடக்கிவைத்தார். இதனைத் தொடர்ந்து  அர்ச்சகர்கள் தள்ளுவண்டி மூலம் வீடு வீடாகச் சென்று நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

Previous Post Next Post