திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தடியெடுத்து வெறியாட்டம்...50 நாள் சோறு போட்டத்துக்கு நல்லா வச்சு செஞ்சுட்டானுக...

திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பச் சொல்லி தடிகளை எடுத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதில் கம்பெனி ஊழியர்களுக்கு காயம் ஏற்ப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது.


கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுக்கு வரும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.


அவர்களை அனுப்பி வைப்பதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கு வடமாநில அரசு நிர்வாகங்களே காரணம். வெளிமாநிலத்திலிருந்து வரும் சொந்த மாநிலத்துக்காரர்களை குவாரண்டைன் செய்ய வசதிகளை அந்த அரசுகள் ஏற்பாடு செய்த பின்னரே இவர்களை அழைத்துக் கொள்ள முடியும்.


 எனவே அவர்களது சொந்த மாநில அரசு அனுமதி அளித்த பின்னர் தான், சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியும்.  அதுவரை இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கம்பெனிகளில் அந்தந்த முதலாளிகள் செலவிலேயே உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.


மேலும், பல இடங்களில் மாவட்ட நிர்வாகமும், தன்னார்வலர்கள் சார்பிலும் உணவு வழங்கப்பட்டும் வருகிறது. 


இதுதவிர தாங்களாகவே வாகனம் ஏற்பாடு செய்து கொண்டு செல்பவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உடனுக்குடன் பாஸ் வழங்கி வருகிறது.


இந்நிலையில் திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊர் அனுப்பக் கோரி, கடந்த இரண்டு நாட்களாக சில இடங்களில் போராட்டம் நடத்தினர். அவர்களையும் அனுப்புவதற்காக கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.


கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அவிநாசி அருகில் புது திருப்பூரில் தேசிய நெடுஞ்சாலையிலேயே டயரை கொழுத்தி எரிய விட்டு வடமாநிலத்தினர் புதுவித போராட்டத்தையும் நடத்தி இருந்தனர்.


இந்த நிலையில், நேற்று  திருப்பூர்  ஊத்துக்குளி, அருகில் தளவாயிபாளையத்தில் உள்ள அகில் என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பனியன் கம்பெனி விடுதியில் தங்கியுள்ள தொழிலாளர்கள் தடிகளை எடுத்துக் கொண்டு தகராறு செய்துள்ளனர். 


தடியுடன் தகராறு தொடர்பான வீடியோ:



தங்களைச் சொந்த ஊருக்குஅனுப்ப கோரி அந்த கம்பெனியில் வேலை செய்யும் 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பனியன் கம்பெனியை விட்டு வெளியேற முயன்றனர். அப்போது நிர்வாகம் சார்பில் மறுத்துள்ளதாக தெரிகிறது.


இதையடுத்து அங்கு உள்ள பெண்கள் உள்பட அனைவரும் திரண்டு பனியன் கம்பெனியில் உயர் பதவியிலுள்ள தமிழ்நாட்டு ஊழியர்களுடன் தகராறில்  ஈடுபட்டனர். இதில் வடமாநில பெண்கள் மற்றும் இளைஞர்கள் அடித்ததில் கம்பெனியின் மனிதவள மேம்பாட்டுப் பிரிவு ஊழியர்கள் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.


இத்துடன் பனியன் கம்பெனிக்காரர்கள் தற்காப்புக்காக தாக்கியதில் வடமாநில இளைஞர்கள் தரப்பிலும் காயம் ஏற்ப்பட்டு உள்ளது.


தகவல் அறிந்து வந்த ஊத்துக்குளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


அங்குள்ள பெரும்பாலான ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், தாங்களாகவே தகராறு செய்து தமிழ்நாட்டு பணியாளர்களை அடித்து உதைத்ததுடன்,  தமிழ்நாட்டில் உள்ளவர்கள் தான், தங்களை  பனியன் கம்பெனியில் வைத்து வெளியே விடாமல் அடித்து உதைப்பதாக ஒடிசா மாநிலத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். 


சில வீடியோக்களையும் ஒடிஷாவில் உள்ள செய்தி சேனல்களுக்கு அளித்ததுடன், அங்கு சமூக வலைத்தளங்களிலும் பரப்பி விட்டுள்ளனர். இதனால்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இந்த சம்பவம் குறித்து ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலீசார் இருதரப்பிலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.


இதுகுறித்து திருப்பூர் தொழிலதிபர்கள் சிலர் கூறியது:


வடமாநில இளைனர்களை கடந்த 50 நாட்களாக உணவு, இடம் அளித்து தங்க வைத்திருக்கிறோம். அதற்காக எந்த கட்டணமும் பெறவில்லை. அவர்கள் ஊருக்கு செல்ல வேண்டாம் என நாங்கள் தடுக்கவில்லை. பஸ் மூலம் சொந்த செலவில் செல்ல விரும்பினால் ரூ.6500 வரை ஒரு நபருக்கு செலவாகிறது. அந்த செலவு செய்து செல்ல வடமாநிலத்தவர்கள் விரும்பவில்லை.


இதனால் ரயில் தான் விட வேண்டும் என்கிறார்கள். ரயில் செல்லும் அறிவிப்பு வரும் வரை கம்பெனியிலேயே வைத்திருக்க வேண்டும் என்று அரசு உத்தரவு காரணமாகத்தான் அவர்களை வெளியே செல்லாமல் தடுக்கிறோம். மற்றபடி சொந்த செலவில் செல்வதை நாங்களும் தடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகமும் உடனடியாக பாஸ் வழங்கி அனுப்புகிறது.


இப்போதைக்கு வடமாநிலத்தவர்கள் உடனே ஊருக்கு செல்ல வேண்டும் என நினைக்கிறார்கள். அதனால் சம்பளம் தராமல் ஏமாற்றுகிறார்கள். உணவு அளிக்கவில்லை என்றெல்லாம் பொய்யான புகார்களை வடமாநில கலெக்டர்களுக்கு அளிக்கிறார்கள். அதனடிப்படையில் திருப்பூர் மாவட்டத்துக்கு புகார் வருகிறது.


ஆனால் நாங்கள் அவர்களுக்கு இன்று வரை உணவு அளித்தே வருகிறோம். 


அதையெல்லாம் மறந்து விட்டு சொந்த ஊர் செல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக, எங்களுடன் தகராறு செய்கிறார்கள். 


இவர்களை வைத்தெல்லாம் தொழில் நடத்த முடியாது என்று எங்களுக்கே தெரியும். இவர்களை உடனே அனுப்பி விடுவது தான் நல்லது. இல்லாவிட்டால் பெரிய அளவில் தகராறு அல்லது கலவரம் செய்து சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்ப்படுத்தி விடுவார்கள். என்று கூறினார்.


நிலைமை இப்படி இருக்கையில், நேற்று நடந்த தகராறை அப்படியே மாற்றி, சம்பளம் வழங்காமல், திருப்பூர் பனியன் கம்பெனிக்காரர்கள் தங்களை அடித்து உதைப்பதாக வடமாநில சேனல்களுக்கு தகவல்களை அளித்து உள்ளார்கள். 


இதனால் வெளியான செய்தியாலும், வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோக்க்களாலும் திருப்பூர் தொழில்துறையிலும் அரசு வட்டாரத்திலும் பரபரப்பு நிலவுகிறது.


வடமாநில சேனல்களில் வெளியான வீடியோ செய்தி:



 


ஏற்கனவே கொரோனாவால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள திருப்பூர் தொழில் துறையினரை வடமாநில தொழிலாளர்கள் செய்யும் இதுபோன்ற செயல்கள் பெரும் மன அழுத்ததில் தள்ளி உள்ளது.


சீக்கிரமா ரயில விட்டு, அவங்களை ஊருக்கு அனுப்பி வையுங்க சார்...


 


 


 


Previous Post Next Post