பூமலூர் ஊராட்சியில் 500 ஏழை எளிய குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள்; எம்.எல்.ஏ கரைப்புதூர் ஏ.நடராஜன் வழங்கினார்

 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் ஊராட்சி ஒன்றியம் பூமலூர் ஊராட்சியில் கொரானா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அஇஅதிமுக பூமலூர் ஊராட்சி கழகத்தின் சார்பாக நடு வேலம்பாளையம், சின்னியம்பாளையம், கிராம பகுதிகளுக்கு 500 ஏழை எளிய குடும்பங்களுக்கு பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் A.நடராஜன் அரிசி உள்ளிட்ட காய்கறிகளை வழங்கினார்.

 


 

உடன் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் A.சித்துராஜ், ஊராட்சி கழக செயலாளர் NK.பரமசிவம், ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் நடராஜன், சீனிவாசன், தங்கராஜ், முருகானந்தம், ஆனந்தன், மகளிர் அணி குட்டி, சிவகாமி, பழனியம்மாள், மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கப்பட்டு கலந்து கொண்டனர்