திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் அதிமுக 5வது வார்டு சார்பில் நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு அத்தியாவசிய நிவாரண பொருட்கள்

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் அதிமுக 5வது வார்டு சார்பில் நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு அத்தியாவசிய நிவாரண பொருட்கள்.
திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் 5வது வார்டு அதிமுக சார்பில் 100க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு அத்தியாவசிய நிவாரண பொருட்களை வட்ட செயலாளர் சிவில் வீ.சீனுவாசன் வழங்கினார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகின்றது. இதனை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 17ந் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையட்டி பள்ளி, கல்லூரிகள், உணவு விடுதிகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் 5வது வார்டு அதிமுக சார்பில் நகராட்சியில் தற்காலிகமாக பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் 100 பேருக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் அரிசி காய்கறி மளிகை பொருட்கள் மற்றும் முகக்கவசம் கையுறை சோப்பு உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு 5வது வார்டு அதிமுக வட்ட செயலாளர் சிவில் வீ.சீனுவாசன் தனது சொந்த செலவில் ரூ. 2லட்சம் மதிப்பில் அத்தியாவசிய நிவாரண பொருட்களை வழங்கியதோடு அவர்களுக்கு முழுஉடல்கவசம், கையுறை, முகக்கவசம், சோப்பு, கிருமிநாசினி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி பாதுகாப்புடன் பணியாற்றுமாறு கேட்டுக் கொண்டார். அப்போது அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து நிவாரண உதவிப்பொருட்களை வாங்கிச் சென்றனர்.

இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ஆல்பர்ட், தூய்மை மேற்பார்வையாளர்கள் சி.வெங்கடேசன், டி.மேகநாதன், அதிமுகவை சேர்ந்த மாவட்ட பிரதிநிதி பி.ஆறுமுகம், 5வது வட்ட பிரதிநிதி டி.செல்வம், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் மனோ முருகன், ஆர்.செல்வராஜ், எஸ்.தமிழ்ச்செல்வன், கே.மீசை விஜி டி.காளிதாஸ் எல்.ராஜ் ஜெ.மணிகண்டன் பாலமுருகன் உள்பட அதிமுக நிர்வாகிகள் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.