மசூதிகளில் சமூக இடை வெளியுடன் தொழுகை நடத்த அனுமதி வழங்க வேண்டும்

மசூதிகளில் சமூக இடை வெளியுடன் தொழுகை நடத்த அனுமதி வழங்க வேண்டும்  : அரசுக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் கோரிக்கை !

 

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

இது குறித்து ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது  .

 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் ஊரங்கு உத்தரவை அமல் படுத்தியது . மேலும் அரசுகள் அமல் படுத்திய ஊரங்கு உத்தரவுக்கு மதிப்பளித்து இஸ்லாமியர்கள் முழு ஓத்துழைப்பு வழங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது  . 

 

மேலும் ஊடங்கு உத்தரவுனால் இஸ்லாமியர்களின் முக்கிய வழி பாட்டு தளமான மசூதிகளில்  தொழுகை  முடியாமல் முற்றிலும் முடங்கியுள்ள இந்த நிலையில் இம்மாதம் புனித ரமலான் நோன்பை முன்னிட்டு மசூதிகளில் சிறப்பு தொழுகைகள் நடத்த முடியாமல் இஸ்லாமியர்கள் பெரும் மன உழைச்சலுக்கு ஆளாகி உள்ளனர் . 

 

கொரோனா தொற்று நோயின் காரனமாக  மக்கா,மதினாவில் சமூக  இடை வெளியை கடை பிடித்து இமாம்களை பின் பற்றி தொழுகைகள்  நடை பெற்று வருது போல் தமிழகத்திலும் சமூக இடை வெளி விட்டு  மசூதிகளில் தொழுகைகள் நடை பெருவதற்கு தமிழக அரசு பரிசிலினை செய்ய  வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது.

 

எனவே  : இந்த நோன்பு நாளில் மசூதிகளில்  தொழுகைகள் நடத்த முடியாமல் மன வேதனையோடு இருக்கின்ற  இஸ்லாமியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் மசூதிகளில் சமூக இடை வெளி விட்டு தொழுகைகள்  நடத்த அனுமதி வழங்க  உடனடியாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் . என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்  .

Previous Post Next Post